மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சமயோசிதமாக செயல்படுவது நல்லது. உங்களை சுற்றி இருக்கும் பலரும் உங்களை ஏமாற்ற நினைப்பார்கள். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு அதிகரிக்கும். பொருளாதாரம் மேம்படும். உத்யோகஸ்தர்களுக்கு நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத நிகழ்வுகளை சந்திப்பீர்கள். எங்கும் எதிலும் நேர்மையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் சிறுசிறு சண்டைகள் சச்சரவுகள் வந்து மறையும். சுயதொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்கள் ஆதரவு கொடுப்பார்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காணும் யோகம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. அரோக்கியம் சார்ந்த விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமையில் கூடுதல் அக்கறை தேவை. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். புதிய தொழில் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை சுற்றி பல எதிர்ப்புகள் எழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். உத்யோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்கள் அதிகரிப்பு ஏற்படும். தன்னம்பிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்வீர்கள். எதிர்பாராத நபரை சந்திக்கும் வாய்ப்பு அமையும். கணவன் மனைவி இடையே ஒற்றுமையுடன் இருக்க முயற்சிப்பது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் கிடை ப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கூடுதல் பொறுப்புணர்வை அதிகரிக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் எதையும் மேலோட்டமாக எடுத்துக் கொள்வது நல்லது. ஆழமாக சிந்திப்பது ஆபத்தை கொடுக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனதில் குழப்பம் நீடிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் தீர விசாரிக்காமல் முடிவெடுப்பது நல்லதல்ல. கணவன் மனைவியிடையே சந்தேகத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு மோதல்கள் வந்து செல்லும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற பிரச்சனைகளை இழுத்துப் போட்டு கொள்ளாமல் அமைதியாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியிடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பகைவர்களின் தொல்லை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய நட்பு வட்டம் விரிய வாய்ப்புகள் உண்டு. பயணங்களால் அனுகூலப் பலன் கொடுக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். சுய தொழில் புரிபவர்களுக்கு சமயோஜித புத்தி தேவை. எதையும் உள்ளார்ந்து சிந்திப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகரிக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும்.