மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் எடுப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்த தடைகள் விலகும். சுய தொழிலில் லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் குவியும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பேச்சு வார்த்தைகள் உங்களுக்கு மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை குதூகலத்தை உண்டு பண்ணும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்கள் மூலம் வரவேண்டிய பணம் வந்து சேரும். வெளியிட பயணங்களின் பொழுது உடைமை மீது கவனம் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு மலரும் வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கக்கூடிய அற்புதமான நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு விரிசல் வந்து மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் பொருளாதாரம் காணப்படும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்களில் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும் என்பதால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே வெறுப்புகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். சுய தொழிலில் திடீர் அதிர்ஷ்டம் வரும் பொறுமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பகை வளரும் எச்சரிக்கை வேண்டும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய கை ஓங்கி இருக்குமாறு துணிச்சலாக சில விஷயங்களை செய்வீர்கள். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியை நோக்கிய பாதையாக அமையப் போகிறது. கணவன் மனைவி ஒற்றுமையில் குறை இருக்காது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வளர்ச்சியை காணக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பதால் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் முக்கிய முடிவுகளை எடுக்கலாம். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக மலரப் போகிறது. நீங்கள் எந்த ஒரு முக்கிய விஷயங்களிலும் காலதாமதம் செய்யாமல் முடிவுகள் எடுப்பது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரக்கூடிய வாய்ப்புகளை பெறுவீர்கள். தம்பதியருக்குள் அன்னோன்யம் கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பொருட் சேர்க்கை உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே நடக்கும் பனிப்போர் நீங்கும். தேவையற்ற விஷயங்களில் பரவசப்பட வேண்டாம். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை மேலும் வலுவாக வாய்ப்புகள் உண்டு எனவே விழிப்புணர்வுடன் செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணியில் பொறுப்புடன் இருப்பீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சுய சிந்தனையுடன் இருப்பீர்கள். மற்றவர்களுடைய பேச்சைக் கேட்டு நீங்கள் செய்ய நினைப்பதில் இருந்து பின்வாங்க வேண்டாம். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் வரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் அப்படியே நடக்கும் என்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களை விட்டு சென்றவர்கள் உங்களைத் தேடி வரக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். கணவன் மனைவி இடையே விரிசல் விழக்கூடும் எனவே அனுசரித்து செல்வது நல்லது. சுய தொழிலில் ஏற்றம் காண்பீர்கள் எனினும் பணத்தை கையாளுவதில் கவனம் செலுத்துங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எண்ணியது ஈடேறும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப விஷயங்களில் மற்றவர்களை தலையிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் நிகழும். அவசரப்படாமல் எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து கையாளுவது நல்லது. சுய தொழிலில் லாபம் காண கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் குறித்த விஷயத்தில் சாதக பலன் கிடைக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மன இறுக்கத்தில் இருந்து விடுபட போகிறீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரக்கூடும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகளும் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உடன் இருப்பவர்களை உங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு விழிப்புணர்வு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும்.