மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. எதிர்பாராத இடங்களிலிருந்து புதிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும் யோகமுண்டு. சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுப பலன்கள் கிடைக்க கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அலைச்சல் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இழந்த பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. விட்டு சென்ற உறவுகளுக்கு உங்களைப் பற்றிய சிந்தனை மேலோங்கி காணப்படும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை வலுப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கக்கூடும் என்பதால் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. தடைப்பட்ட சுப காரியத்தில் வெற்றிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு இறை வழிபாடுகளில் மீது அதிக ஆர்வம் காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் யோகம் உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் மாற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். புதிய உத்திகளை கையாளுவதன் மூலம் தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். தேவையற்ற பகைவர்களை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும் என்பதால் செலவில் கவனம் தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் தொடர்ந்து முன்னேற கூடிய நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள் எனவே எதிலும் அலட்சியம் காட்ட வேண்டாம். புதிய நண்பர்கள் உடைய ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டியாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய சிந்தனையை மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைய இருக்கிறது. சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு குடும்பத்தினருடைய ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். சுய தொழிலில் ஏற்றம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம் எனவே எச்சரிக்கை தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது என்பதால் உற்சாகத்திற்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் நஷ்டங்கள் ஏற்படலாம் என்பதால் சாதுரியம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு சமயோசிதமாக செயல்படுவதன் மூலம் வெற்றிகள் பல குவியும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணப் பிரச்சனைகள் தீரும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த மனக் கசப்புகள் மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த உங்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தேவையற்ற விஷயங்களில் இருந்து கவனத்தை திசை திருப்புவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத திடீர் நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் அமையும். புதிய பொருள் சேர்க்கை உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்திலிருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக மறைய கூடும். கணவன் மனைவிக்கு இடையே மன கசப்புகள் மறையும். சகோதர சகோதரிகளுக்கு இடையே பாச பிணைப்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வருபவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். உத்யோகத்தில் உள்ளவர்கள் வெளி மனிதர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நல்ல சிந்தனைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும். எடுக்கக் கூடிய முடிவுகளில் சாதக பலன் உண்டு. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முதலீடுகள் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.