மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்ட படி நடக்கக் கூடிய அற்புத வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் எதிர்பாராத திடீர் மாற்றங்கள் ஏற்பட்டு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் ஒருமித்த கருத்து உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி ஆகக் கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு துணிச்சலாக முக்கிய முடிவுகளை எடுக்கும் தைரியம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவியிடையே இருக்கும் ஊடல்கள் நீங்கும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அந்தஸ்து உயரக் கூடிய அற்புத நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் நீங்கள் இரட்டிப்பு லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்த கூடிய அற்புதமான சந்தர்ப்பங்கள் உருவாகும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது உத்தமம். ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தைரியம் அதிகரித்து காணப்படும் இனிய நாளாக இருக்கும். முன் வைத்த காலை பின் வைக்காமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணியாளர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. கணவன் மனைவி பிரச்சனைகளை பேசி முடிவுக்கு கொண்டு வருவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புத்துணர்ச்சியுடன் காணப்பட கூடிய நாளாக இருக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்பதால் சோர்வுடன் காணப்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகம் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிக உரிமை ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் இருப்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு முன்கோபம் சில இழப்புகளை ஏற்படுத்தும் என்பதால் பொறுமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அரசு காரியங்கள் நல்ல பலன் கொடுக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புக்கு நேர்மறையாக பலன்கள் உண்டாகும் என்பதால் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டி பொறாமைகளை தாண்டி நல்லதொரு லாபம் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களிடம் தேவையற்ற மனக்கசப்புகள் ஏற்படும் என்பதால் மௌனம் காப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள், ஆசைகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நன்மைகள் நடக்க கூடிய நாளாக இருக்கிறது. புதிய கத்தில் இருப்பவர்கள் தங்கள் புதிய பொறுப்புகளை சுமக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பீர்கள். பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரித்து காணப்படும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் சில தடைகள் தாமதங்கள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்துடன் வெளியிட பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிறைவு இருக்கும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் தேவையற்ற விமர்சனங்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து காணப்படும் என்பதால் அசதி உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம்:
கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற அவமானங்களை சந்திக்க நேரும் என்பதால் கூடுமானவரை மற்றவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு சுகமாக இருக்கும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. புதிய எங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பழைய நிலுவையில் இருந்து வந்த சில விஷயங்கள் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் தரும். சகோதர சகோதரிகளுக்கு இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.