மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு நன்மைகள் நடக்க போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உடைய எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எல்லா நன்மைகளும் நடக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. வேண்டாம் என்று தட்டிக் கழித்த ஒன்று உங்களிடம் மீண்டும் வந்து சேரும். சுபகாரியத் தடைகள் விலகி திருமண யோகம் கைகூடி வரும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் என்றோ செய்த புண்ணியம் இன்று உங்களை வந்தடைய வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய இரக்க சுபாவம் மற்றவர்களை எளிதில் கவர செய்யும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை நடத்திக் காட்டக்கூடிய வைராக்கியம் பிறக்கும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாளில் எல்லா நலன்களும் பெற கூடிய பாக்கியம் உண்டாகும். சுப யோக சுப காரியங்கள் கை கூடி வரும். மனதிற்கு பிடித்தவர்களை மணந்து கொள்ளும் பாக்கியம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் உண்டு. வைராக்கியத்துடன் செயல்படும் உங்களுடைய எண்ணத்திற்கு அனுகூல பலன் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நன்மைகள் நடக்கும். எதிர்பார்க்கும் தனலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கப் போகிறது.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் உழைப்பே உயர்வு என்பதை உணர்ந்து செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை விட அதிக லாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய போட்டியாளர்களை சமாளிக்க கூடிய வகையில் அமைப்பு இருப்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எத்தகைய பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் அமைப்பை பெற்றுள்ளதால் நன்மைகள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களை சுற்றி இருப்பவர்கள் உடைய குணநலன்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை பெறுவீர்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனம் தேவை. தேவையற்ற குழப்பங்களை மனதில் போட்டு வைக்காமல் வருவது வரட்டும் என்று விட்டுவிடுவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறையும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை சாதித்துக் காட்டும் வல்லமை பிறக்கும். உங்களை எதிர்த்தவர்கள் ஒன்றுமில்லாமல் செய்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்கள் மறைமுகப் பகை அவர்களை இனம் கண்டு கொள்ளும் வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்டநாள் பிரச்சினைகளைச் சமாளிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கிறது. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகி வரும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை மேலோங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய சந்திப்பு அமையும். புதுயுகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூல பலன் கொடுக்கும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் வெற்றி தான். தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சனைகளை எளிதாக சமாளிப்பீர்கள். பொருளாதார ரீதியான ஏற்றம் சிறப்பாக இருப்பதால் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து விடுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும்.