மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற முன் கோபத்தால் சில விஷயங்களை இழக்க நேரும் என்பதால் கோபத்தை கட்டுப்படுத்துவது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிதானம் தேவை, உங்களுடைய உழைப்பை இரட்டிப்பாக கொடுக்க வேண்டி இருக்கும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே பேச்சு வார்த்தைகள் நடக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய நல்ல நாளாக இருக்கும். பொது விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய உத்திகள் சிந்தையில் உதிக்கும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை முடித்து காட்டக் கூடிய அற்புதமான யோகம் உண்டு.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. புதிய வேலை தேடி அலைபவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். புதிய முதலீடுகள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனையை வேறு வகையில் மாற்றி அமைப்பீர்கள். இதுவரை இருந்து வந்த நிலை மாறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பழைய சிக்கல்களையும் முடித்து வைக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத விதத்தில் சில அனுகூலமான பலன்கள் கிட்டும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாடு உங்களுடைய குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்க போராடுவீர்கள். தேவையற்ற நபர்களுடைய நட்புறவை துண்டிப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் உறவு மேலும் வலுவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் முன் எச்சரிக்கையுடன் இருப்பது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைகளை தாண்டிய முன்னேற்றம் இருக்கும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்ப சூழல் மாறக்கூடிய நல்ல வாய்ப்புகள் உண்டு. வீண் பழிகள் மறைந்து குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நட்பு வட்டம் விரிவடையும். புதிய நண்பர்களின் அறிமுகம் முன்னேற்றத்தைக் கொடுக்கும் வகையில் இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமல் போக வாய்ப்புகள் உண்டு எனினும் பொறுமை காப்பது நல்லது.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நாள் சிறந்த நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றி அடையும். சமூகத்தில் உங்களுடைய மதிப்பும், அந்தஸ்தும் உயரும். பிள்ளைகள் உங்களுடைய சொல் கேட்டு நடந்து கொள்வார்கள். சுயதொழிலில் நீங்கள் இழந்த பொருட்களை மீட்டு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் எனவே பொறுமை தேவை.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறு சிறு வாக்கு வாதங்கள் மன உளைச்சலை ஏற்பத்துவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அனாவசிய செலவுகள் குறையும். சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வுடன் செயல்பட கூடிய நாளாக இருக்கிறது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கடன் சுமை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கூடுமானவரை கஷ்டப்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதையும் சாதித்து காட்ட கூடிய தன்னம்பிக்கையை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய பேச்சுவார்த்தைகள் மீண்டும் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும் எனவே டென்ஷனுடன் காணப்படுவீர்கள்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணப்புழக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். சுய தொழிலில் ஏற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.