மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்க இருக்கிறது. புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கி காணப்படும். போக்குவரத்து தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு மறதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நற்செயல்கள் மூலம் நற்பலன்கள் உண்டாகும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தேவையற்ற சினம் பிரச்சினைகளை உண்டு பண்ணும். கூடுமான வரை பொறுமை காப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பாராத அளவிற்கு லாபம் அதிகரிக்கும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றி ஆகும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வரவை விட செலவு அதிகம் சந்திக்க நேரும் என்பதால் கூடுமான வரை ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய ஆலோசனையை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் படிப்படியாக சீராகும்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் உயரும். சமுதாய அக்கறை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நன்மை நடைபெறும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்களுக்கு தங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்க போராடும் ஏற்படும்.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய இரக்க குணத்தால் நீங்கள் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் ஆக்கத்துடன் செயல்படுவீர்கள். புதிய வீட்டில் உள்ளவர்கள் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும் நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு முன்கோபம் தவிர்ப்பது நலம் தரும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விடாமுயற்சி செய்வது திருவினையை உண்டாக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நிறைவான நாளாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் யோகம் வரும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் எதிர்பார்த்த ஒன்று கால தாமதமாக வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனை உதிக்கும். உத்தியோகஸ்தர்கள் பேராசை பெரு நஷ்டம் என்பதை அறிந்து செயல்படுவது நல்லது. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புகழ் ஓங்கி இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நலம் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த விஷயங்களில் தடங்கல் ஏற்படலாம்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் சமாதானம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டி, பொறாமைகள் அதிகரிக்கக்கூடிய நாள் என்பதால் கூடுதல் ஒத்துழைப்பு கொடுத்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற சஞ்சலங்கள் தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் உதவிகள் கிடைக்கும். பணவரவு குறித்த விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள் மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு எதிலும் பெருமை ஏற்படக் கூடிய அமைப்பு என்பதால் உங்கள் திறமைகளை சரிவர வெளிப்படுத்துங்கள்.