மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்தது நடக்கும் இனிய நாளாக இருக்க போகிறது. சுப காரியங்களில் ஈடுபடுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழுகலாம் கவனம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்து வைக்கும் அடியில் கவனம் தேவை. குடும்பத்தில் குதூகலம் காணப்படும். சுய தொழிலில் உள்ளவர்கள் மூன்றாம் நபர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்தது இடத்திலிருந்து பணம் வருவதற்கு காலதாமதம் ஏற்படலாம். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நீங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் காலதாமதம் ஆகலாம் எனவே பொறுமையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுக்கு அனுசரணையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் உடைய ஆதரவு தேவை என்பதால் இணக்கமாக செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்றும் நினைக்காத ஒன்று நடக்கும். தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் கவனம் தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் துவங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு சாதக பலன்கள் உண்டு. மாணவர்களின் கல்வியில் கவனம் தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசனை செய்வது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய வேண்டாம். சுய தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த கவலைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற சிந்தனைகள் எனும் என்பதால் தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதையும் முழுமூச்சோடு ஈடுபட்டு முடித்துக் காட்டுவது நல்லது. சோம்பல் தோல்வியை தரும். குடும்பத்தில் சிறு சிறு சண்டை சச்சரவுகள் தோன்றி மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நல்ல அதிர்ஷ்டம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் என்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் துடிப்பாக செயல்படுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பு கூடும். சில தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்புஉண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்ததை முடிக்க கூடிய அற்புதமான வாய்ப்புகள் உண்டு.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபரை சந்திப்பீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருப்பதால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை சார்ந்த நெளிவு சுளிவுகள் கற்றுக் கொள்ளும் சூழ்நிலை அமையும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய கை ஓங்கி இருக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய பணிகளில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை சமாளிப்பீர்கள். மறைமுக எதிரிகளின் தொல்லை வலுவாகும் என்பதால் கூடுதல் விழிப்புணர்வுடன் செயலாற்றுங்கள்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தில் எதிர்பாராத புது நிகழ்வுகள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதியவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும் எனவே கூடுதல் சக்தியை பயன்படுத்த வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு பரிந்துரை செய்வதில் கவனம் தேவை.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பலவீனம் அறிந்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவியிடையில் ஒத்துழைப்பு தேவை. உற்றார், உறவினர்களின் ஆதரவு பெருகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக பணியாளர்களை ஆதரிப்பது நல்லது.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சாதுரியமாக நடந்து கொள்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் விரிசல் விழலாம் எனவே அமைதி காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய யுக்திகளை கையாளும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமையை பல விமர்சனங்களை தாண்டி நிருபிக்க முயற்சி செய்வீர்கள்.