மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலை செய்யும் இடங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு இன்றைய நாள் லாபகரமானதாக அமையும். கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருப்பது அவசியம்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று மந்தமாகவே இருக்கும் வெளியூர் பயணங்கள் செல்லும் போது ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். யாரிடமும் தேவை இன்றி பேச வேண்டாம். வேலைக்கு செல்பவர்கள் தங்கள் மேலதிகாரிகளிடம் சற்று அமைதி காப்பது நல்லது. தொழில் செய்பவர்கள் கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கணவன் – மனைவிக்கு இடையே ஒற்றுமை மேலோங்கி இருக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் தொடங்கக்கூடிய ஒரு நாளாக அமையும். வேலைக்கு செல்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு அமோகமாக இருக்கும். உறவினர்களின் விஷயத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. தொழில் செய்பவர்களுக்கு லாபம் இன்று கூடுதலாகவே இருக்கும். பிள்ளைகள் மூலம் சுபச்செய்தி வந்தடையும்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் இன்று எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சிறு பிரச்சனைகள் கூட வாக்குவாதத்தில் போய் முடிய வாய்ப்புண்டு. நண்பர்கள் மூலம் இன்று அனுகூலம் உண்டு. தொழில் செய்பவர்கள் விநாயகப் பெருமானை வணங்கி தொழிலை ஆரம்பித்தால் நல்ல பலன் உண்டு. அலுவலகப் பணியில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் தேவையின்றி பேச வேண்டாம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் மத்திமமான ஒரு தினமாக அமையும். பயணம் செல்வது சுற்றுலா செல்வது போன்ற எண்ணங்கள் மேலோங்கி இருக்கும். பழைய நண்பர்களை சந்திக்கக்கூடும். புதுமண தம்பதிகளுக்கு சிறப்பான ஒரு நாளாக இருக்கும். தொழில் செய்பவர்கள் யாரையும் நம்பி தொழில் செய்யும் இடத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டாம். அலுவலகப் பணியில் இருப்பவர்கள் தங்கள் பணிகளை இன்று விரைந்து முடிப்பர்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் எதிலும் கொஞ்சம் கவனம் தேவை. உங்களுக்கு சம்பந்தமில்லாத விவாதத்தில் ஈடுபட்டு பிரச்சனையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். கணவன் மனைவியிடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் வேலைகளை சற்று கடினமாக உணர்ந்தாலும் மேலதிகாரிகளிடம் தேவையின்றி வாக்குவாதத்தில் ஈடுபடாமல் வேலையை செய்து முடித்தல் நல்லது. தொழில் செய்பவர்களுக்கு இன்று சற்று மந்தமான நிலையிலேயே வியாபாரம் இருக்கக்கூடும்.
துலாம்:
ராசிக்காரர்களுக்கு இன்று சிரித்த முகத்துடன் இருக்கக்கூடிய ஒரு நாளாக அமையும். பழைய நண்பர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம். கணவன் மனைவி இடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். உறவினர்களிடையே ஒற்றுமை மேலோங்கும். தொழில் செய்பவர்களுக்கு இன்று லாபகரமான ஒரு நாளாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஆதரவும் கிட்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சுபதினமாக இருக்கும். பணிச்சுமைகள் அதிக அளவில் இருக்காது என்பதால் நண்பர்களோடு அதிக நேரம் பேச வாய்ப்பிருக்கும். குடும்பத் தலைவிகளுக்கு உன்னதமான ஒரு நாளாக இருக்கும். வண்டி வாகனங்களில் செல்லும்போது சற்று கவனமாக இருப்பது அவசியம். தொழில் செய்பவர்கள் தாங்கள் செய்யும் செலவுகளை குறைத்துக் கொண்டால் நல்லது. வருமானத்தைப் பொறுத்தவரை லாபகரமாகவே இருக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்றைய நாள் பக்திமயமான ஒரு நாளாக இருக்கும். மகான்களை சந்தித்து ஆசி பெறுதல், இஷ்ட தெய்வ கோவிலுக்கு செல்லுதல் போன்றவை இன்று நடக்க வாய்ப்புண்டு. தொழில் செய்பவர்கள் குலதெய்வத்தை வணங்கி இன்று தொழிலை ஆரம்பித்தால் லாபம் பன்மடங்காக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் உள்ள ஊழியர்களிடம் ஜாக்கிரதியாக பேசுவது நல்லது.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை நிறைந்த நாளாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளை இன்று மேற்கொண்டால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகம் உண்டு. தொழில் செய்பவர்கள் புதிய புதிய வியாபார யுக்திகளை இன்று முயற்சித்துப் பார்க்கலாம்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இன்று தேவையற்ற முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தொழில் செய்பவர்கள் அகல கால் வைக்காமல் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் அஜாக்கிரதையாக கையாளாமல் கூடுதல் கவனத்துடன் அனைத்தையும் செய்தால் மட்டுமே மேற்கொண்ட காரியங்கள் சரியாக நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும் என்பதால் எதையும் கவனமாக பேசுவது நல்லது.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் இன்று ஒரு முறைக்கு இருமுறை யோசித்த பிறகு எந்த ஒரு செயலையும் செய்வது நல்லது. கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் பணம் சம்பந்தமான விஷயங்களில் அதிகப்படியான கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இன்று அதிக நேரம் வேலை செய்யக்கூடிய ஒரு நிலை ஏற்படலாம்.