மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய உற்சாகத்துடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் தனலாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய எதிர்பார்ப்புகள் அதிகரித்து காணப்படும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய புத்தியுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத வகையில் ஆதாயம் காணலாம்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நட்பு வட்டம் மேலும் வளர கூடிய வாய்ப்புகள் உண்டு. பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமைய போகிறது. கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்லுதல் நலம் தரும். சுய தொழிலில் லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையில் இருந்து விலகாமல் இருப்பது நல்லது. தேவையற்ற பேச்சுவார்த்தைகள் தவிர்ப்பது நலம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவு ஏற்படும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன அமைதி தேவை எனவே யோகா தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஓய்வு தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் எனினும் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பக்தியில் அதிக நாட்டம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து ஏமாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளுக்கு இடையூறுகள் ஏற்படலாம் எனினும் விடா முயற்சி செய்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தெளிவான சிந்தனை இருக்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமைக்கு குறைவிருக்காது.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஓய்வு தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது. கடின உழைப்பு உங்களுக்கு புது உத்வேகத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் உயர கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுடைய திறமைகளை மேலும் மெருகேற்றிக் கொள்ள முயற்சி செய்வீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய புதிய செயல்பாடுகளில் அதிக நாட்டம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும். பிள்ளைகள் வழியில் நற்பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்களை சுற்றியுள்ளவர்களை பற்றிய தெளிவு ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முன்கோபத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி நிற்பது அனுகூலமான பலன்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு செய்யும் செயலில் தடங்கல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு குறித்த விஷயங்களில் சாதகப்பலன் உண்டாகும்.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மனம் மகிழும் படியான நிகழ்வுகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத இடத்திலிருந்து புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் வலுவாகும் என்பதால் உங்களை நீங்களே மேலும் தயார்படுத்திக் கொள்வது நல்லது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நிறைய நடைபெறக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி கைகூடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் கொடுக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. வெளியிட பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு