மேஷம்:
மேஷ ராசியில் பிறந்த நீங்கள் இன்று சொந்த முயற்சியால் செய்த காரியம் ஒன்று சாதக பலனை கொடுக்க போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் ஈட்ட கூடிய நாளாக இருக்கும். உத்தியோக ரீதியான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும். சுப காரிய தடைகள் விலகும்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்த நீங்கள் இன்று எதிர்காலம் பற்றிய திட்டமிடலில் மூழ்கி இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுக்கும் புதிய முயற்சிகள் எல்லாம் வெற்றி தரும் வகையில் அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும் யோகமுண்டு. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்த நீங்கள் இன்று எதற்கெடுத்தாலும் கோபப்படுவீர்கள். உங்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் நன்மைகள் நடைபெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும்.
கடகம்:
கடக ராசியில் பிறந்த நீங்கள் இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படும் அற்புதமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு வரவை விட அதிக செலவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோக ரீதியான முன்னேற்றம் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்கும். வருமானம் பன்மடங்கு பெருகும். குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்த நீங்கள் இன்று எதையும் பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வெளியிட பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் சில இடையூறுகளை சந்தித்து பின் வெற்றி பெறும். ஆரோக்கியத்தில் இருக்கும் சிறுசிறு பாதிப்புகள் நீங்கும்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்த நீங்கள் இன்று சந்திக்கும் புதிய நபர்கள் மூலம் அனுகூலமான பலன்களை தர இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நினைத்ததை சாதித்துக் காட்ட கூடிய அற்புத நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை ஏற்படும். கணவன் மனைவி உறவு சிக்கல்கள் தீரும்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்த நீங்கள் இன்று உங்களை சுற்றி நடக்கும் நல்லவை, தீயவைகளை புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய நபர்களின் அறிமுகம் தவிர்க்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்த வேலைகள் முடியும். குடும்பத்திலும் உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்த நீங்கள் இன்று உங்கள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில செய்திகளைக் கேட்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி எதிர்பார்க்கும் லாபம் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமான உயர்வு ஏற்படும். குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் சரியாகும்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்த நீங்கள் இன்று எதையும் துணிச்சலுடன் செய்யக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் பகை ஒழியும். குடும்பத்தில் உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலமான பலன்கள் எல்லாம் உண்டாக இருக்கிறது. பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளித்து முன்னேறுவீர்கள்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்கள் இன்று எந்த ஒரு செயலையும் கட்டுக்குள் வைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கிய ரீதியான வீண் விரையங்கள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை விழிப்புடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கான வருமானம் பெருகும். மற்ற மனிதர்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் செலுத்துங்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்கள் இன்று நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் எதிர்பார்ப்புக்கு மீறி நடைபெற வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்கள் இன்று புது புத்துணர்ச்சியுடனும் செயல்படும் நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இதுவரை நிலவிவந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் நீங்க உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது அவசியம்.