மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளக்கூடிய அமைப்பு உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் பொறுப்பு தேவை. ஆரோக்கிய பாதிப்புகளை அவ்வப்போது கவனிக்கவும் அலட்சியம் வேண்டாம்.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புது உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனம் கஷ்டங்கள் நீங்க கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முகத்தில் புதிய பொலிவு காணப்படும். நீங்கள் எதிர்பார்த்ததெல்லாம் நடக்கப் போகிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஏற்றம் தரக்கூடிய அமைப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கிய ரீதியான வீண் விரயங்களை சந்திக்கலாம்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சுய முயற்சி வெற்றி வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும். சுபகாரிய தடைகள் விலகும். கணவன் மனைவி ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுகப்படும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேன்மை உண்டாகும். வாகன பயணங்களில் கவனம் தேவை.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எடுக்கக்கூடிய முடிவுகளில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது. செய்யும் தொழிலே தெய்வம் என்று போற்றுவீர்கள். பொருளாதார ரீதியான முன்னேற்றம் வீட்டு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்யும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படும். மனம் தளராமல் இருப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் வம்பு, வழக்குகளில் மாட்டிக் கொள்ளக்கூடும் என்பதால் பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருத்தேக்கம் ஏற்படாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. கணவன் மனைவி இடையே இருக்கும் மனக்கசப்புகள் தீரும். ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கட்டுப்பாடுடன் இருக்க முயற்சி செய்வது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மனதை அலைபாய விட வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுலபமான வேலை கூட போராடி முடிக்க வேண்டி இருக்கும். முன்கூட்டியே திட்டமிடுதல் நன்மை தரும்.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைவீர்கள். கணவன் மனைவியிடையே இருக்கும் வெறுப்புகள் மாறக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்பது நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் இருக்கும் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை பெறுவீர்கள்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது. உங்களுடைய முன்கோபம் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நாணயம் தேவை. வாடிக்கையாளர்களின் மனம் கவரும் முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளுடன் இருந்து வந்த சிறு சிறு சண்டை சச்சரவுகள் விலகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். உங்களை சுற்றி இருக்கும் விஷயங்களில் உண்மை தன்மையை அறியும் வாய்ப்புகளை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முழு முயற்சி நல்ல பலன்களை கொடுக்க இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் சிறு சிறு ஊடல்கள் நீங்கும். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பண ரீதியான விஷயத்தில் காலதாமதங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்பு சுமை கூடும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்பது நல்லது. பெரியவர்களின் ஆலோசனை கேட்டு முடிவு எடுங்கள். சுப காரிய தடைகள் விலகும். வெளியூரில் இருந்து புதிய செய்திகள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மன அமைதி தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் விட்டு விலகி சென்றவர்களை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.