மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிதாக பிறந்தது போல் ஒரு உணர்வு இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அமோக லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும். எடுக்கும் முடிவுகளில் எச்சரிக்கை தேவை.
ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தனலாபம் உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சமயோசிதமாக செயல்பட வேண்டும். அலட்சியம் ஆபத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நினைப்பது நடக்க பொறுமை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வீண் பழிகள் ஏற்படும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. ஆரோக்கியம் முன்னேற்றம் இருக்கும்.
கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய குடும்பத்தின் மீது கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத ஏமாற்றம் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயர கூடிய வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதியாக இருக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்களுடைய தொழில் ரீதியான முன்னேற்றம் ஏற்றம் காணும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த பனிப்போர் மெல்ல மறையும். உத்தியோகஸ்தர்களுக்கு சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். வெளியிட பயணங்களின் பொழுது கூடுதல் கவனமாக இருப்பது நல்லது.
கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய தேவைக்கு மீறி செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. வீண் விரயங்கள் ஏற்படலாம். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவதற்கு இடையூறுகள் ஏற்படலாம்.
துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த வேலைகள் கூட சுலபமாக முடியும் நல்ல நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சிக்கல்கள் நிறைந்த வேலையும் சுலபமாக முடியும். உத்யோகஸ்தர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாய் கவனம் தேவை.
விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சுய புத்தியுடன் இருப்பது நல்லது. அடுத்தவர்களுடைய சொல் பேச்சைக் கேட்டால் ஆபத்து இருக்கலாம். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் உண்டு. துறைசார் நிபுணர்கள் ஆலோசனை பெறுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு விழிப்புணர்வு தேவை. ஆரோக்கியம் மேம்படும்.
தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். மனதிற்கு ஒவ்வாத விஷயத்தை செய்யாதீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடிர் அதிர்ஷ்டம் வரும். பணம் பல வழிகளில் இருந்தும் உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பொறுப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் லாபம் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேண்டிய வேண்டுதல் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் உண்டு.
மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். எடுக்கக்கூடிய முடிவுகளில் வெற்றி கிடைக்கும். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைகூடி வரும். விட்டு சென்ற உறவுகள் மீண்டும் வருவர். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு நிதானம் தேவை.