யாழ் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்படுகின்றது
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்கனவே ஒரு லட்சம் பேருக்கு சைனோபாம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில்
அரசினால் யாழ் மாவட்ட மக்களுக்கு வழங்கவென என வழங்கப்பட்டுள்ள மேலும் இரண்டு லட்சம் தடுப்பூசிகள் வழங்கும் திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதிலும் 30 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்று காலை முதல் செயற்படுத்தப்படுகின்றது
ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது