நாட்டில் இன்றைய தினம் இரண்டு மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, மாலை 4.30 முதல் இரவு 10 .30 மணிவரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு இரண்டு மணி நேரம் மின் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பயன்பாட்டுக்குழு இது தொடர்பான அறிவித்தலை சற்று முன்னர் வெளியிட்டது.
மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேர விபரங்கள் தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது