இலங்கை மக்கள் யாரும் இனி எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எரிபொருள் பற்றாக்குறை படிப்படியாக முடிவுக்கு வரும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி எதிர்வரும் மூன்று நாட்களில் எரிபொருள் அதிகளவில் ஏற்றிய கப்பல் நாட்டுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து டீசல் மற்றும் பெற்றோல் ஆகியவை நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.