இந்தியாவில் திருமணத்தின் போது அக்கா உயிரிழந்ததால் மாப்பிள்ளை உடனே உயிரிழந்த பெண்ணின் தங்கையை மணமுடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவின் குஜராத் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. குஜராத்தைச் சேர்ந்தவர் ராணாபாய் புத்தாபாய் அல்கோதர். இவர் தனது மகன் விஷாலுக்கு பெண் தேடி வந்துள்ளார்.
அடம்பிடித்த மாப்பிள்ளை
இந்நிலையில் பாவ்நகரை சேர்ந்த ஜினாபாய் ரத்தோட் என்பவரது மகள் ஹெட்டலை பார்த்து மகனுக்கு திருமணம் செய்ய பேசியுள்ளனர்.
அதனையடுத்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு பெண் அழைப்பு நடந்தபோது, மணமகள் ஹெட்டல் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் , மணமகளை உடனே மருத்துவமனை கொண்டு சென்று பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மணமகள் உயிரிழந்தது அறிந்ததும் மாப்பிள்ளை வீட்டார் திருமணம் நடந்தே தீர வேண்டும் என உறுதியில் இருந்துள்ளனர். இதனையடுத்து , ஹெட்டலின் தங்கையை மணமுடித்து வைக்க கேட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஊர் பெரியவர்களிடம் முறையிட்டுள்ளனர். எனினும் மாப்பிள்ளை வீட்டார் கூறியது சரியே என ஊர்பெரியவர்கள் கூறியநிலையில் உயிரிழந்த பெண்ணின் சகோதரியுடன் மணமகனுக்கு திருமணம் நடதேறியுள்ளது.