உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை ஆதிரித்ததால், அவரது கணவர் அவரை விவாகரத்து செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள பீர்ஷதா என்ற கிராமத்தை சேர்ந்தவர் மொஹமத் நசீம். இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஷனா இராம் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த நாளில் இருந்து ஷனா எப்போதும் பிரதமர் நரேந்திர மோடியை ஆதரித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனால் அவரின் தனது மனைவி மீது அதிருப்தி இருந்தது. அதுமட்டுமல்லாது கடந்த தேர்தல்களில் ஷனா பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் வீட்டில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் சித்ரவதை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து அப்பெண் கடந்த மார்ச் 3 ஆம் திகதி தனது கணவன், அவரின் வீட்டில் இருப்பவர்களுக்கு எதிராக காவல்துறையிக் புகார் செய்தார். இப்புகார் தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவந்த நிலையில் திடீரென மொகமத் தனது மனைவிக்கு முத்தலாக் மூலம் விவாகரத்து கொடுத்து வீட்டைவிட்டு வெளியில் செல்லும்படி விரட்டிவிட்டுள்ளார்.
இதனால் காவல்துறையினர் ஷனாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். அதோடு இது குறித்து மேற்கொண்டு தீவிரமாக விசாரிக்கும்படி உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் அதிகாரி அகிலேஷ் தெரிவித்தார். மேலும் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை இந்தியாவில் முத்தலாக் மூலம் விவாகரத்து கொடுக்க தடை விதித்து நாடாளுமன்றத்திலும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் அதிகமான இடங்களில் சட்டவிரோதமாக இது போன்று முத்தலாக் மூலம் விவாகரத்து கொடுக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருப்பதாக வேதனை வெளியிடப்பட்டுள்ளது.