இந்திய ரூபாவின் பெறுமதியில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்க இந்தியா கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் தங்கம் மீதான இறக்குமதி வரியை நேற்று 5 சதவீதத்தால் அதிகரித்து 12.5 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாகவும் இந்திய தகவல்கள் கூறுகின்றது. தங்கம் இறக்குமதியை குறைக்கவும், அதன் மூலம் டொலர் கையிருப்பை சேமிக்கவும் இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
நேற்று ஐக்கிய அரபு இராச்சிய திர்ஹாமுக்கு ரூபாயின் பெறுமதி 21.52 / 21.54 ஆக உள்ளது. இது இந்திய வெளிநாட்டவர்களுக்கு பணம் அனுப்ப குறிப்பிடத்தக்க வாய்ப்பை உருவாக்க உதவுகிறது.
தங்கம் மற்றும் ஆபரணங்களின் நுகர்வைக் குறைக்கும் நோக்கில் இந்திய அரசின் வரி விதிப்பு நடவடிக்கையானது, உலோகத்தின் இறக்குமதியை குறைக்கும் விடயத்தில் தீர்க்கமானதாக உள்ளது.
இது ஐக்கிய அரபு இராச்சியத்திற்க்கும் இந்தியாவுக்கும் இடையிலான தங்கம் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையின் இடைவெளியை அதிகரிக்கிறதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.