மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகள் வெற்றி தரும். நீண்ட நாட்களாக வராத கடன் தொகை இந்தவாரம் முயற்சி எடுத்தால் வசூலாகி விடும். இழந்த சொத்துக்களை திரும்பவும் மீட்டெடுப்பதற்கு இது சிறந்த வாரம். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். வேலை செய்யும் இடத்திலிருந்த குழப்பங்கள் நீங்கி, சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்ல பெயரை வாங்குவீர்கள். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சந்தோஷத்தை தரும். தினமும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் அவரவர் வேலையை அவரவர் செய்தால் எந்த பிரச்சனையும் கிடைக்காது. அடுத்தவர்களுடைய விஷயத்தில் மூக்கை நுழைத்தால் பிரச்சனை தான். உங்களுடைய சொந்த பிரச்சனையை நண்பர்களிடமோ உறவினர்களிடமோ பகிர்ந்து கொண்டாலும் அது பிரச்சனையில் தான் போய் முடியும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. வேலை செய்யும் இடத்தில் உங்களது பொருட்களை நீங்கள் தான் பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும். முக்கியமான கோப்புகளை உஷாராக வைத்துக்கொள்ளுங்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த அதிகப்படியான கடனை வாங்க வேண்டாம். தினம்தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் அமையப்போகின்றது. எந்த வேலையை தொடங்கலாம் எந்த வேலையை தொடங்க கூடாது என்ற மன குழப்பத்தில் இருந்து நீங்கள் வெளியே வருவீர்கள். தெளிவான மனதுடன் நீங்கள் செய்யக்கூடிய வேலை உங்களுக்கு திருப்திகரமாக அமையும். வருமானம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். பிரச்சினைகள் என்று பெரியதாக சொல்லிக் கொள்ள எதுவுமில்லை. அப்படியே ஏதாவது பிரச்சனை வந்தாலும் உங்களுடைய புத்திசாலித்தனத்தால் அதை சமாளித்து விடுவீர்கள். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் திறமையாக செயல்பட போகிறீர்கள். அடுத்தவர்களுடைய கவனத்தை உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்வீர்கள். நீங்கள் எதை தொட்டாலும் அதில் வெற்றி காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் உண்டு. மனதில் உறுதியுடன், செய்யும் செயலில், விவேகத்துடன் கம்பீரமான தோற்றத்தோடு வலம் வரப் போகிறீர்கள். தினந்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். நீங்கள் எந்த விஷயத்தை தொடங்கினாலும் அது கொஞ்சம் இழுபறியாகத் தான் அமையும். தேவையற்ற அலைச்சல்களும் தேவையற்ற பிரச்சினைகளும் உங்களைப் பின்தொடரும். எப்போதும்போல நீங்கள் செய்யக்கூடிய தினசரி வேலைகளை சிறப்பாக செய்து முடித்து விடுங்கள். புதியதாக எந்த முயற்சியையும் செய்ய வேண்டாம். அனாவசியமாக அடுத்தவர்களுடைய பிரச்சனையில் மூக்கை நுழைக்க வேண்டாம். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். தினந்தோறும் ஓம் நமசிவாய மந்திரத்தை மனதிற்குள் உச்சரிக்க வேண்டும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான செலவுகளுடைய வாரமாக அமையப்போகின்றது. குடும்ப விசேஷங்களுக்கு வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். விருந்தினர்களின் வருகை இருக்கும் சுபச்செலவுகள் தான். கொஞ்சம் கடன் வாங்கும் சூழ்நிலை கூட ஏற்படலாம். ஆனால் சந்தோஷத்திற்கு எந்த குறைவும் வராது. வியாபாரத்தில் புதிய முயற்சிகளை செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உறவுகளிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தினம்தோறும் ஸ்ரீராமஜெயம் சொல்லுவது நன்மை தரும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பாராட்டுகள் குவிய போகின்றது. மதிப்பும் மரியாதையும் உயரப் போகின்றது. நீங்களே எதிர்பாராத நல்ல செய்தி ஒன்று தொலைபேசியின் மூலமாகவோ, நண்பர்களின் மூலமாக உங்களுடைய செவிகளை வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் அனுசரணை தேவை. வேலைச்சுமை கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கின்றது. வீட்டில் இருக்கும் பெண்கள் பொறுமையோடு குடும்ப விஷயங்களை கையாளுவது நன்மை. தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பக்தி நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. குடும்பத்தோடு ஆன்மீக சுற்றுலா செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டிற்கு முன்னுரிமை கொடுக்கப்பீங்க. முடிந்தால் குலதெய்வக் கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். வீட்டில் இருக்கும் பெண்கள் சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு சில காரியங்களை சாதித்து விடுவீர்கள். பெண்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். செல்வாக்கு அதிகரிக்கும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வார தொடக்கத்தில் சில சரிவுகள் ஏற்பட்டாலும், வார இறுதியில் நல்ல முன்னேற்றங்கள் வந்து சந்தோஷத்தை கொடுத்து விடும். தேவையற்ற மனக்குழப்பங்கள் நீங்கும். முக்கியமான முடிவுகளை வாரத்தின் இறுதியில் எடுப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழிலில் உங்களுக்கு சாதகமாக சில விஷயங்கள் நடக்கும். லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஆனால் உறவுகளிடத்தில் மட்டும் சண்டை வராமல் இருக்க வாக்குவாதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். தினம்தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்போடு செயல்படப் போகிறீர்கள். உங்களால் முடியாது என்று விட்டு வைத்திருந்த விஷயங்களை எல்லாம் தோண்டி எடுத்து, அலசி ஆராய்ந்து அதை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடுவீர்கள். காரியத்தடை அத்தனையும் விலகும். புதியதாக உடம்பிற்குள் ஏதோ சக்தி புகுந்துகொண்டு உங்களை மேலும் மேலும் உயர்த்தி செல்லப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பிரச்சனை தந்தவர்கள் அனைவரின் மூக்கையும் உடைக்க போகிறீர்கள். சொல்லப்போனால் இந்த வாரம் முழுவதும் உங்கள் கைதான் ஓங்கி நிற்கும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு மேலும் வெற்றியைத் தரும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முயற்சிகள் வெற்றியடையும் வாரமாக தான் இருக்கப்போகின்றது. அரசு தொடர்பான ஏதாவது வேலைகள் இருந்தால் அதை இந்த வாரம் தொடங்கலாம். சொந்த தொழிலில் யோசிக்காமல் புதிய முயற்சிகளை எடுக்க வேண்டாம். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். வேலை செய்யும் இடத்தில் மந்தமான போக்கு நிலவும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையில் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். எடுத்த முடிவு சரிதானா என்ற குழப்பம் மனதில் இருக்கும். இருப்பினும் உங்களுடைய மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதை முழுமனதோடு, முழு முயற்சியோடு செயலாற்றினால் அதில் நிச்சயம் உங்களுக்கு வெற்றி தான் கிட்டும். மன குழப்பம் வேண்டாம். தெளிவான சிந்தனையோடு செயல்படுங்கள். அடுத்தவர்கள் சொல்கேட்டு உங்களுடைய முடிவுகளை மாற்றிக் கொள்ளாதீர்கள். மற்றபடி வருமானம் நிலையாக இருக்கும். பணத்திற்கு எந்த வித பெரிய கஷ்டமும் ஏற்படாது. தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.