மேல் மாகாணத்தில் வருடாந்த சுகாதார இடமாற்றங்களை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேல் மாகாணத்தில் வருடாந்த இடமாற்றங்கள் முறைசாரா முறையில் இடம்பெற்றுள்ளதாக மேல் மாகாண வைத்தியசாலை ஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய, இந்த இடமாற்றங்களை தற்காலிகமாக இரத்து செய்து, நாடளாவிய ரீதியான இடமாற்றங்களை மாத்திரம் அமுல்படுத்துமாறு மேல் மாகாண ஆளுநர் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் குணதிலக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இதனை அவர் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு விடுத்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.