2022 இல் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிப்பு என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தில் இதுவரை 60 பேர் டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்ததுடன் அவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள் மற்றும் 50க்கும் குறைந்த வயதுடையவர்களென அவர் கூறியுள்ளார்.
வைத்திய ஆலோசனை கட்டாயம்
எனவே, காய்ச்சல் ஏற்பட்டால் ஓய்வில் இருக்க வேண்டுமெனவும் 24 மணித்தியாலங்களுக்கு மேல் காய்ச்சல் காணப்பட்டால் வைத்திய ஆலோசனைகளை கட்டாயமாக பெற வேண்டுமெனவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர அறிவுறுத்தியுள்ளார்.
காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒருவர், காய்ச்சல் மற்றும் உடல்வலியை போக்க பெரசிட்டமோல் மாத்திரம் பயன்படுத்த வேண்டுமெனவும் ஏனைய மருந்துகளை தவிர்க்க வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் டெங்கு நுளம்பு பரவும் வகையில் அல்லாமல் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்