இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ரி20 உலகக் கிண்ண போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்குமிடையில் இன்று (26) இடம்பெற்ற போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி அயர்லாந்து அணி 05 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி அயர்லாந்து அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பதிலுக்கு, இங்கிலாந்து அணி துடுப்பெடித்தாடிய போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதன்போது, இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் 105 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது.
அதன்படி, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 05 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.