இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் ஆட்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரும் கடற்படை சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவினரால் வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக குறித்த பிரிவுக்கு அழைக்கப்பட்டபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில், திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் வசிக்கும் குழுவினரே இந்த மனித கடத்தலை மேற்கொண்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.