திருகோணமலை – பன்குளம் பகுதியில் யானை ஒன்று குழிக்குள் விழுந்து சுமார் ஆறு நாட்களாக மீட்கப்படாத நிலையில் உயிருக்கு போராடி வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பன்குளம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் உள்ள வாய்க்கால் ஒன்றினுள் குறித்த யானை வீழ்ந்து உயிருக்கு போராடி வருகின்றது.
இந்நிலையில் தொடர்புடைய அதிகாரிகள் யானையை காப்பாற்ற முன்வருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்