அட்டுலுகம சிறுமியான ஆய்ஷா கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருகோணமலையில் உள்ள பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று, இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
வன்கொடுமைக்கு உட்படுத்தப்படும் சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் நீதிக்கோரி வடகிழக்குப் பெண்கள் ஒன்றியத்தினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை நிறுத்தக்கோரி பதாகைகளை ஏந்தி, நீதியை பெற்றுக் கொடுக்குமாறு வலிறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், இளைஞர் – யுவதிகள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது