ஆப்கானிஸ்தானில் படாக்சான் மாகாணத்தில் பைசாபாத் நகரில் பாதுகாப்பு படையினரை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்றின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
இதில், 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்தனர். இதுபற்றி தலீபான்களின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்துல் மதின் குவானி தெரிவிக்கையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு அது வெடித்ததில் இந்த சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார்
அத்துடன் கஞ்சா செடிகளை அழிப்பதற்காக அவர்கள் சென்றபோது, இந்த சம்பவம் இடம்பெற்றது என்றும் இந்த பகுதியில் தலீபான்கள் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என குடிமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமையும்