தென்னிந்திய நடிகை ரம்பா புலம்பெயர் யாழ்ப்பாண தமிழரை திருமணம் செய்து கனடாவில் குடும்பத்துடன் செட்டில் ஆகி விட்டார்.
இந் நிலையில் சமீபத்தில் எடுத்த அவர்களின் குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் , ரம்பாவின் மூத்த மகள் அழகில் அம்மாவை மிஞ்சிவிடுவார் என பலரும் கூறியுள்ளனர்.
சமீபத்தில் வீட்டில் நடத்திய பூஜை புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜயவாடாவில் பிறந்து வளர்ந்த ரம்பா 90 களில் பலரின் கனவுக்கன்னியாக விளங்கினர்.
அதன் பின்னர் கனடாவாழ் யாழ்ப்பாண தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபனை திருமணம் செய்த ரம்பா கனடாவில் வாழ்ந்து வருகிறார். கனடாவில் வசித்து வந்தாலும் இந்திய பாரம்பரியத்தை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார் நடிகை ரம்பா.
தனது வீட்டில் சமீபத்தில் நடத்திய பூஜை புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சினிமா பிரபலங்களையும் தனது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
47 வயதாகும் நடிகை ரம்பாவுக்கு, சாஷா பத்மநாபன், லாவண்யா பத்மநாபன் என இரு மகள்கள் உள்ளதுடன் மகனும் உள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ரம்பாவின் மூத்த மகள் அச்சு அசல் அம்மாபோல இருக்கிறாரே என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ரம்பாவை போல அவரது மகளும் சினிமாவில் நடிக்க வருவாரா என்கிற கேள்விகளையும் எழுப்பி உள்ளனர்.