அலரி மாளிகையிலிருந்து பிரித் ஓதும் சத்தம் கேட்பதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மிக அதிகமான சத்தத்துடன் பிரித் ஓதும் ஓசை கேட்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டக் காரர்கள் கூடாரம் அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அதனை தடுப்பதற்காக பிரித் ஓதும் சத்தம் ஒலிக்கச் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது பிரித் ஓதும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சத்தத்தின் காரணமாக அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.