சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனா மீது குற்றச்சாட்டை முன்வைத்த சாவகச்சேரி ஆதார வைத்திய சாலை நலம்புரி சங்கம் வெளியிட்டுள்ள கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஊழல் வாதி என மக்களால் அழைக்கப்படும் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரனை தமது சங்கத்தின் போசகர்களில் ஒருவராக வைத்துக் கொண்டு அர்ச்சுனா மீது குற்றச்சாட்டை கூறுவது தான் வேடிக்கை என நெடிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வைத்தியர் அர்ச்சுனா வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்ற நிலையில் குற்றச்சாட்டுக்கு இலக்காக இருக்கும் கேதீஸ்வரன் அங்கம் வகிக்கும் நலன்புரிச் சங்கம் நீதியான சங்கமா என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளமை சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்துயுள்ளது.