இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளையும் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
பிரதேசத்தில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த இரு வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகங்கள் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த பாடசாலைகள் இன்று மற்றும் நாளை (6 மற்றும் 7 ஆம் திகதிகள்) மூடப்படும் என வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.