அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: இந்திய வம்சாவளி மாணவி மரணம்! ; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஈரானுடன் தொடர்பா?
அமெரிக்காவில் டெக்சாஸ் ஆஸ்டினி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 21 வயது தமிழ் மாணவி உயிரிழந்துள்ளார்.
சவிதா சண்முகசுந்தரம் என்ற மாணவி, டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்தார்.
ஆஸ்டினில் உள்ள ஒரு மதுபான விடுதி வெளியே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் அவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
53 வயதான நிடியாகா டியாக்னே என்பவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது உடையில் ஈரானியக் கொடி வடிவமைப்பும் “அல்லாஹ்வின் சொத்து” என்ற வாசகங்களும் இருந்ததாக Associated Press செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம், அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இடம்பெற்றதால், தாக்குதலின் பின்னணி குறித்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில், மேலதிக தகவல்கள் வெளியாக காத்திருக்கின்றன.

