முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது சேவைகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு ரத்து செய்துள்ளது என தூதரகம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்றும் மக்கள்போராட்டம் வெடித்த நிலையில் நாடளாவிய ரீதியில், அவசரகாலசட்டத்தை பிரதமர் ரணில் பிறப்பித்துள்ளார்.
மக்களின் ஆர்ப்பட்டத்தால் கோட்டாபய நாட்டைவிட்டு வெளியேறியிருந்த நிலையில், பிரதமர் ரணிலையும் பதவி விலகுமாறு கோரி மக்கள் ஆர்ப்பாடத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் கொழும்பில் படையினர் களமிறப்பட்டதால் அங்கு பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.