அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் அனைத்து பல்கலைக்கழக வைத்திய பிரிவு மாணவர்களினால் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டமானது தற்போது கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பமாகி உள்ளதுடன் இப் போராட்டத்தில் ஈடுபடுவோர் காலி முகத்திடல் நோக்கி செல்லவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப் போராட்டத்தின் போது அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியவண்ணம் போராட்டக்காரர்கள் பேரணியாக செல்கின்றனர்.
அத்துடன் இப் போராட்டகாரர்கள் செல்லும் பாதை வழியாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பயணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது