கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மினுவாங்கொட பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து பெண் ஒருவர் அத்தனுகலு ஓயாவில் குதித்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
23 மற்றும் 28 வயதிற்கு இடைப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு அத்தனுகலு ஓயாவில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் உயிர்காக்கும் படையினர், கடற்படை அதிகாரிகள், இராணுவ பேரிடர் முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் பிரசேவாசிகள் காணாமல் போன பெண்ணை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.