அம்பலாங்கொடை, வேனமுல்ல புகையிரத கடவை ஊடாக பயணித்த வேன் ஒன்று, கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று (13) காலை இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் வேனின் சாரதி (வயது 67) சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது .
மக்கள் கோரிக்கை
குறித்த புகையிரத கடவையில் ஒளி சமிக்ஞை நீண்ட காலமாக செயலிழந்துள்ளதாக பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் புகையிரத கடவையில் ஒளி சமிக்ஞை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பிரதேசவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.