நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் நேற்று (22) நிறைவேற்றப்பட்டது.
இதனை அடுத்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் சில பொருட்களுக்கு நிர்ணய விலையினை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்ட பின்னர், அதனை மீறுகின்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குறித்த நடவடிக்கையானது நேற்று நள்ளிரவு முதல் நடைமுறை படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இதன்படி, தனிநபர் வர்த்தகம் மற்றும் நிறுவனங்களுக்காக அறவிடப்படும் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.