நாட்டில் வெவ்வேறு இடங்களில் அடையாளம் தெரியாத 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் (25) தெரிவித்தனர். அதன்படி குருவிட்ட, பேலியகொட, மாரவில மற்றும் ராகமை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலிருந்து இந்தச் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பின்வல பகுதியில் உள்ள கங்கையில் நிர்வாணமாகச் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது . 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட ஆணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது .
இந்தச் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை . அத்துடன் பேலியகொட 4 ஆம் மைல் கல்லுக்கு அருகில் பட்டியசந்தி பகுதியில் ரயிலால் மோதுண்டு உயிரிழந்த நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது .
இவர் வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்திலான சேட்டும், கறுப்பு நிறத்திலான காற்சட்டையும் அணிந்திருந்துடன் வலது கையில் பச்சை குத்தியுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர் .
அதேவேளை மாரவில பகுதியிலுள்ள சதுப்புநிலத்தில் இனந்தெரியாத நபர் ஒவரின் சடலம் நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளது. 55 முதல் 60 வயதுடைய ஆணின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.
ராகமை – கடவத்தை பகுதியில் தனியார் நிறுவனமொன்றுக்கு முன்பாக உள்ள படிக்கட்டுகளில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், இவர் சாம்பர் நிற புடவை மற்றும் கறுப்பு கை சட்டை அணிந்திருந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறியுள்ளனர்.