வீழ்ந்து கிடக்கும் நாட்டை மீள கட்டியெழுப்புவதாக இருந்தால், அடுத்து வரும் ஜனாதிபதியாக ஒரு நகைச்சுவைக்காரரை மக்கள் தெரிவு செய்ய கூடாதென தெரிவிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினாலேயே நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் சவால்களுக்கு முகங்கொடுத்து அவற்றை வெற்றிக்கொள்ளவும், வேலைத்திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய தலைவராகவும் ரணிலே காணப்படுகின்றார் எனத் தெரிவித்த அவர், ரணிலை விமர்சித்த அவமதித்த, அவமானப்படுத்திய அனைவரும் தற்போது அழிந்துள்ளனர் என்றார்.
இந்நிலைமைகளை நன்கறிந்த நாட்டு மக்கள் ஐ.தே.கவின் பின்னால் அணிதிரண்டு இருப்பதாகவும், நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி அடுத்த வருடம் ஏப்ரல் மாதமாகும் போது மோசமான நிலைக்கு செல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.