இலங்கையின் கிழக்கு மாகாணம் அக்கறைப்பற்றில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று பலரையும் பதறவைத்துள்ளது. ஆறு வயது பெண் குழந்தையொன்றினை கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அக்குழந்தை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டே இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுகின்றது.
அதேசமய்ம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாக வேதனை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் ஒருவர் மக்கள் இவ்வாறான நிலமைக்கு தளப்பட்டுள்ளமைக்கு அரசாங்கமே பொறுப்பெற்க வேண்டுமென காட்டமாக கூறிய காணொளி வெளியாகியுள்ளது.