இலங்கை கடற்பரப்பில் எரிந்த Xpress Pearl கப்பலால் ஏற்பட்ட பாரிய கடல் மாசுபாட்டிற்கு நட்டஈடு வசூலிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட வழக்குகளைத் தவிர்ப்பதற்காக 250 மில்லியன் டொலர்கள் லஞ்சம் பெற்றதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக கடல் காப்புறுதி நிறுவனம், நபர் ஒருவருக்கு 250 மில்லியன் டொலர்களை வழங்கியதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று (25) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
250 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
இந்த நபரின் பெயர் சாமர குணசேகர என்றும் மற்றும் அவரது சர்வதேச வங்கி கணக்கு எண் (IBAN) Natwest Cot, 50000 இல் 154793334 ஆகும். GB 53 NW B K 50000015479234. BIC NW B K G 2L என்ற குறியீட்டின் ஊடாக இந்தக் கணக்கில் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதோடு முடிந்தால் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களின் பெயர்களை வெளியிடுமாறு எனக்கு சவால் விடப்பட்டது. நீதி அமைச்சர் என்ற முறையில் நான் சட்டத்தை மதித்தேன்.
அதை இனி காவல்துறைதான் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார். “எனக்கு ஆதாரம் கிடைக்கவில்லை. எனக்கு தகவல் ஒன்றுதான் கிடைத்தது. இந்த வெளிப்பாட்டிற்கு நான் பொறுப்பேற்கவில்லை என தெரிவித்த அமைச்சர், இது ஆதாரமா இல்லையா என்று போலீசார் விசாரணை நடத்தி இறுதி முடிவை தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினார்.
அதேவேளை பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்த தகவலை வைத்து விசாரணை செய்து வருகிறார் எனவும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார் .