இளைஞன் ஒருவன் சிக்கத்தை பாசமாக தடவும் போது அவரை அந்த சிங்கம் தாக்க முயற்ச்சிப்பது இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்கள் பரவி வருகின்றன. நாம் நமது வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பல விஷயங்களை இதன் மூலம் கற்றுக்கொள்கிறோம்.
இதில் மிருகங்களை பதிவு செய்த வீடியோ அதிகமாக பரவப்பட்டு வருகின்றது. உலகத்தில் எங்கு என்ன நடந்தாலும் நாம் இருக்கும் இடத்தில் இருந்து எல்லாவற்றையும் பார்க்க முடியும்.
அப்படி ஒரு வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது. தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில் முதலில் ஒரு சிங்கத்தின் கழுத்தில் கயிறு கட்டி, ஒருவர் கைகளில் வைத்திருக்கிறார்.
இன்னொருவர், அந்த சிங்கத்தை தடவிக்கொடுக்கிறார்.முதலில் சாதுவாக அமர்ந்திருக்கும் அந்த சிங்கம் பின்னர் தடவி கொடுத்தவரை பார்த்து தலையை திருப்பி பின்னர் அவர் மேல் எகிறுகிறது.

