வவுனியா மாநகரசபை பகுதியில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டாக்காலியாக திரிந்த 60க்கும் மேற்பட்ட மாடுகள் மாநகரசபையினரால் பிடிக்கப்பட்டுள்ளன.
மாநகரசபை பகுதியில் கட்டாக்காலி மாடுகளால் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில், இரவு நேரங்களில் பொதுப்போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் திரிவதை தடுக்கும் வகையில் முன்னதாக ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
அறிவுறுத்தலுக்கு அமைவாக, 2025 மே 25ஆம் திகதி இரவு, வவுனியா நகரின் பல பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பாதிப்புக்கு காரணமான 60க்கும் மேற்பட்ட மாடுகள் மாநகரசபையினரால் பிடிக்கப்பட்டு, தற்போது மாநகரசபையின் பராமரிப்பில் வைத்திருக்கப்படுகின்றன.
மாநகரசபை வெளியிட்டுள்ள தகவலின் படி, பிடிக்கப்பட்ட கால்நடைகளின் உரிமையாளர்கள், 10 நாட்களுக்குள் தங்களது மாடுகளுக்குரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி, தண்டப்பணத்தை செலுத்திய பின், அவற்றை மீளப் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேவேளை, 10 நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள், பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் என மாநகரசபை தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை வவுனியா நகரத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.