கிளிநொச்சி – விளாவோடை வயல் பகுதியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் மேற்கொண்டார்.
அதன்அடிப்படையில் மேலும் எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதற்கமைய குறித்த இடத்தில் நாளை முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.