UK BRANCH-WTBF ன் அனுசரனையுடன் JAFFNA DISTRICT BRANCH – WTBF ன் ஏற்பாட்டில் JDBA மற்றும் இலங்கை பூப்பந்தாட்டக் கிளையுடனும் இணைந்து சிறப்பான முறையில் இடம்பெற்ற JAFFNA DISTRICT BADMINTON JUNIOR CHAMPIONSHIP-2022 மாவட்ட பூப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வானது 29.12.2022 அன்று மாலை மூன்று மணியளவில் Jaffna bowling center (JBC) ,Kokuvil பூப்பந்தாட்ட உள்ளக அரங்கில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற்றது. இதன்போது வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கான வெற்றிக்கேடயங்களும் வெற்றிச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் திரு.பாலன் முகுந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். அத்துடன் யாழ்மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் திரு. காண்டீபன் திரு.சுபாஸ்கரன் திரு .தோமஸ் மற்றும் JBC court முகாமையாளர் திரு .சோமேஸ் ஆகியோரும் சிறப்பதிதிகளாக இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
யாழ்மாவட்டத்தின் வலிகாமம், வடமராட்சி,யாழ்ப்பாணம்,தென்மராட்சி வலயங்களைச்சேர்ந்த 350 ற்கு மேற்பட்ட வீரவீராங்கனைகள் ஆர்வமுடன் பங்குபற்றியிருந்தனர். இப்பெருமுயற்சிக்கு பூப்பந்தாட்ட அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்பட்டுவரும் இலங்கை பூப்பந்தாட்டக்கிளை-WTBF ற்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் இந்நிகழ்விற்கு அனுசரனையளித்த உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை- லண்டன் கிளையினருக்கு மிகப்பெரிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். Specially great thanks to UK BRANCH- WTBF.
ht=”300″ class=”alignnone size-medium wp-image-48485″ />