கிண்ணியா குறிஞ்சாகேணி ஆற்றில், இன்று மாலை குளிக்கச் சென்ற 10 வயதுடைய சிறுவன் முகமது ரியாஸ் ரம்மி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அவர் கிண்ணியா மத்திய கல்லூரியில் தரம் 5 இல் கல்வி கற்று வந்தார்.
அந்த நேரத்தில் மூன்று சிறுவர்கள் இணைந்து ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நிலையில், நீரோட்டத்தில் சிக்குண்டுள்ளனர். இதில் இரண்டு சிறுவர்கள் கரையை அடைந்தாலும், ரம்மி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 45 நிமிடங்கள் தேடிய பின் பிரதேசவாசிகள் அவரது சடலத்தை மீட்டுள்ளனர். திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.ஐ.எம். சாபி சம்பவ இடத்திற்கு வருகை தந்து, விசாரணைகளை மேற்கொண்டு, மற்றைய சிறுவர்களிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

