இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 டிக்கெட்டுக்களை வாங்க ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பாரிய வரிசைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கும் இலங்கை அணி, டி20 தொடரின் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று உள்ளூர் நேரப்படி இரவு 07.00 மணிக்கு எதிர்கொள்கிறது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம், சில டிக்கெட்டுகள் கிடைக்கும் என அறிவித்ததையடுத்து, போட்டியை பார்வையிட டிக்கெட்டுகளை வாங்குவதற்காக தம்புள்ளை மைதானத்தில் நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்கின்றனர்.
இந்த நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் இன்று அதிகாலை 03.00 மணி முதலே வரிசையில் நின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.