பருத்தித்துறை பிரதான வீதி, கோப்பாய் சந்திக்கு அருகே உள்ள கழிவு வாய்க்காலில் இருந்து இனம் காணப்படாத வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து நேற்று (26) நண்பகலில், கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டுள்ளார்.அதன் பின்னர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மரணத்தின் காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.இது இயற்கை மரணமா அல்லது வேறு காரணங்களால் ஏற்பட்டதா என்பதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.