இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் கம்பஹா மீன் விற்பனை நிலையத்தில் நுகர்வோருக்காக விசேட விற்பனை ஊக்குவிப்பு வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
கடந்த 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்த வேலைத்திட்டம், புதிய மீன்களை நியாயமான விலையில் வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.நிகழ்வை நீர்கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேச முகாமையாளர் மற்றும் ஊழியர்கள் ஒருங்கிணைத்தனர்.வேலைத்திட்டத்தின் போது விசேட குலுக்கல் சீட்டிழுப்பு (raffle draw) நடத்தப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்தில் ஏற்படக்கூடிய மீன் தட்டுப்பாட்டை குறைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.மீன் விற்பனைக்கு ஏற்படும் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.ஆரம்ப கட்டமாக, 21 தெரிவுசெய்யப்பட்ட விற்பனை நிலையங்களில் 300-400 கிராம் அளவிலான சிறிய பதப்படுத்தப்பட்ட (frozen) மீன் பொதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
இந்த திட்டங்கள் மூலம், நுகர்வோர் தரமான மீன்களை சுயவிலைக்கு பெற முடியும்.சந்தையில் மீன் பற்றாக்குறையும் விலையுயர்ச்சியும் தடுக்கப்படும் என்று கடற்றொழில் கூட்டுத்தாபன தலைவர் ஜே.ஏ.கே. மார்க் தெரிவித்துள்ளார்.