வங்காள விரிகுடாவில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று ( 25) பாரிய சூறாவளியாக வலுப்பெற்று பங்களாதேஷை நோக்கி நகர்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சூறாவளிக்கு Oman நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Remal எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக , நாட்டில் பலத்த மழைவீழ்ச்சி, கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடரிபில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் கடந்த நாட்களில் உருவாகிய தாழமுக்கம் இன்று பாரிய சூறாவளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூறாவளி இன்று அதிகாலை 5.30 மணிக்கு தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக உருவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து இன்று பிற்பகல் 11.30 மணியளவில் பாரிய புயலாக மாறக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் செயற்படும் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.